பிரசங்கி புத்தகத்தை பற்றிய சுறுக்கமான அறிமுகம்
பிரசங்கி புத்தகத்தை பற்றிய சுறுக்கமான அறிமுகம்:
ஆசிரியர், தேதி மற்றும் நேரம்:
எழுத்தாளரின் பெயர், தேதி அல்லது நேரம் நேரடியாக
பிரசங்கி புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. எபிரேய பாணியையும் புத்தகத்தின் உள்ளடக்கத்தையும்
அடிப்படையாகக் கொண்டு, சாலொமோன் ராஜா தனது வயதான காலத்தில் புத்தகத்தை எழுதியிருக்கலாம்
என்று யூதர்கள் முடிவு செய்திருந்தனர், ஆனால் புத்தகத்தின் முடிவுரை வாழ்க்கைக்கு ஏற்ப
இல்லை என்று வேறு கருத்துகள் உள்ளன, எனவே அது வேறு ஒரு நபராகவும் இருக்கலாம். புத்தகத்தை
அறிமுகப்படுத்தும் புத்தகத்தின் முதல் வசனம், “எருசலேமின் ராஜாவாகிய தாவீதின் குமாரனாகிய
போதகரின் வார்த்தைகள்” என்று எழுதப்பட்டுள்ளது. பூமியில் உள்ள அனைத்து இன்பங்கள், வெளிப்பாடுகள்,
பொக்கிஷங்களை ஆசிரியர் அனுபவித்து மகிழ்ந்ததாகவும் பார்த்திருப்பதாகவும் தெரிகிறது,
ஆனால் அதில் எந்த எந்த அர்த்தமும் அவருக்கு கிடைக்கவில்லை, மேலும் தனது எழுத்தைத் இவ்வாறு
தொடங்குகிறார், “மாயை மாயை எல்லாம் மாயை”, ஏன்று போதகர் கூறுகிறார் (பிரசங்கி 1:
2). அவர் புத்தகத்தை சரியான அர்த்தத்துடன் ஆரம்பித்து இப்படியாக கூறுகிறார், “மாயையின்
மாயை, போதகர் கூறுகிறார்; எல்லாமே வீண் ” என்று (பிரசங்கி 12: 8), இதன் மூலம் சுயத்தையும்
கடவுளையும் புரிந்து கொள்ளாமல் மனிதனின் அனைத்து முயற்சிகளும் அர்த்தமற்றவை என்பதை
நாம் காண முடியும். எருசலேமில் இஸ்ரேல் மீது ராஜாவாக இருந்தார் என்று பிரசங்கி 1:12
ல் ஆசிரியர் உரையாற்றுகிறார், அதே போல் அடுத்த வசனத்திலும் அவர் வானத்தின் கீழ் செய்யப்படும்
அனைத்தையும் ஞானத்தால் தேடவும் தனது இருதயத்தைப் பயன்படுத்தியதாக ஆசிரியர் கூறுகிறார்.
மேலும், ஆசிரியர், “எனக்கு முன்பாக எருசலேமுக்கு மேல் இருந்த அனைவரையும் விட நான் மிகுந்த
ஞானத்தைப் பெற்றுள்ளேன், என் இருதயம் ஞானத்தையும் அறிவையும் பற்றிய சிறந்த அனுபவத்தைப்
பெற்றிருக்கிறது என்று கூறுகிறார் (பிரசங்கி 1:16)”, இது சாலமோன் ராஜாவின் படைப்பாற்றலை
அதிகம் ஆதரிக்கிறது. புத்தகத்தின் போக்கில், ஆசிரியர் மனிதனின் படைப்புகள் மற்றும்
கடவுளின் படைப்புகள் ஆகியவற்றைக் கையாளுகிறார், அவர் வரம்புகள் மற்றும் எல்லாவற்றின்
முக்கியத்துவத்தையும் கையாள்கிறார். புத்தகத்தின் முடிவில், கடவுளுக்குப் பயப்படுவதும்
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதும் மனிதனின் முழு கடமையாகும் என்று ஆசிரியர் முடிக்கிறார்,
ஏனெனில் அது மட்டுமே வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தரும். நன்மையாக இருந்தாலும் தீமையாக
இருந்தாலும், யாராக இருந்தாலும் எப்படி இருந்தாலும் கடவுள் தீர்ப்பில் கொண்டு வருவார்
என்று ஆசிரியர் எச்சரிக்கிறார். ஏனென்றால் அது இல்லாமல் மனிதர்களிடையே எப்போதும் இருக்கக்கூடிய
மற்றும் தேவைப்படும் மதிப்பீடுகளும், தரங்களும், நல்லொழுக்கங்களும் இருக்க முடியாது.
பெறுபவர்கள்:
பிரசங்கி புத்தகத்தைப் பெறுபவர்கள் பற்றி
நேரடியான குறிப்பிடப்படவில்லை. தங்கள் வாழ்க்கையில் கடவுளின் தேவையைப் புரிந்து கொள்ள
வேண்டியவர்கள் இப்புத்தகத்தை பெற ஏற்புடையவர்கள் என்பதை இதன் உள்ளடக்கத்தின் மூலம்
அறியலாம். புத்திசாலியான இப்புத்தகத்தின் ஆசிரியர் ஒரு நல்ல ஆசிரியராக இருக்க விரும்புகிறார்,
மக்களுக்கு அறிவு, ஆராய்தல், படித்தல், பல பழமொழிகளை மிகுந்த கவனத்துடன் ஏற்பாடு செய்தல்
போன்றவற்றை செய்கிறார். அவர் மகிழ்ச்சியான சொற்களைக் கண்டுபிடிக்க முயன்று, சத்திய
வார்த்தைகளை நேர்மையாக எழுதியுள்ளார் (பிரசங்கி 12: 9.10). ஆசிரியர், “என் மகனே, இவற்றைத்
தாண்டியுள்ளவற்றிற்கும் எச்சரிக்கையாக இரு”, பல புத்தகங்களை உருவாக்குவதில் முடிவே
இல்லை, அதிக படிப்பு உடலுக்கு இழைப்பு ”(பிரசங்கி 12:12) என்று குறிப்பிடுகிறார். ‘என்
மகன்’, என்பது இந்த சூழலில், ஆசிரியர் தனிப்பட்ட முறையில் கவனமாக மிக முக்கியமான ஆலோசனையுடன்
மக்களுக்கு எழுதியுள்ளார் என்று பொருள் தரக்கூடும்.
நோக்கம்:
Ø தகுதியானதாகவும் உயர்ந்ததாகவும் கருதப்படும்
அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மறக்கப்படும் என்பதை புரிந்து கொள்ள.
Ø அறிவு நல்லது என்றாலும் அதன் வரம்புகளை புரிந்துகொள்ள.
சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தையும் அறிந்தவர் உலகில் யாரும் இல்லை.
Ø மனிதன் வேலைகளையும் உழைப்பையும் அவனது மரணத்தோடு
எடுத்து செல்ல முடியாது என்பதை உணர, மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனின் உழைப்பை அனுபவிக்கும்
மற்றொருவர் இருப்பார்.
Ø முட்டாள்தனத்தை விட ஞானம் சிறந்தது என்பதைப்
புரிந்துகொள்ள, ஆனால் அனைவருக்கும் இறுதி இலக்கு இருக்கும், மேலும் ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு பிறகு நினைவில் இருக்காது.
Ø வெவ்வேறு காலத்தில் தேவைகளுக்கு ஏற்ப மனிதர்களின்
வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களையும் நிகழ்வுகளையும் புரிந்துகொள்ள, மற்றும் மரணத்தின்
விளைவுகளை அனைவரும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் கடவுள் கொடுத்ததைக் வைத்து மகிழ்ச்சியாக
இருக்க.
Ø பல பாகுபாடுகள் மற்றும் மாயைகளுடன் வாழ்க்கையை
மிகவும் கடினமாக்கும் பூமியின் முகத்தில் சூரியனுக்குக் கீழே இருக்கும் உலகத் தரநிலைகளின்
தீமையை உணர,
Ø தகுதியுள்ள சக்திவாய்ந்த கடவுளுக்கு அஞ்சுவதன்
முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள.
Ø எல்லா நேரத்தையும் ஆற்றலையும் பயன்படுத்துவதன்
மூலம் செல்வத்திற்காகவும் கனத்திற்காகவும் பாடுபடுவதில் வரம்புகள் இல்லை என்பதைப் புரிந்து
கொள்ள, அது வாழ்நாள் முழுவதும் தொடரப்படுவதால் அர்த்தமற்றது.
Ø செல்வம் அல்லது உடைமைகளை தாண்டு மனித உறவுகளின்
முக்கியத்துவத்தை உணர.
Ø விவேகம்- முட்டாள்தனம், நீதி- துன்மார்க்கம்,
பிறப்பு- மரணம் போன்றவற்றின் தீவிரங்களை உணர, வாழ்க்கையை மதிப்புமிக்க முறையில் அனுபவிப்பதற்காக
கடவுளுக்குள் உள்ள சமநிலையைக் கண்டறிய.
Ø ராஜா அல்லது அதிகாரிகளுக்கு செவிசாய்ப்பதன்
முக்கியத்துவத்தையும், கடவுளின் வழிகள் புரிந்துகொள்ள முடியாதவையாக இருப்பதால் தீமையை
எதிர்ப்பதற்கு கடவுளுக்கு பயப்படுவதன் முக்கியத்துவத்தையும் புரிந்துக்கொள்ளவும், மற்றும்
கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் மனிதன் மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்க
வேண்டும் என்றும்.
Ø நல்லதோ கெட்டதோ, நீதியுள்ளதா பொல்லாததா மரணத்தின்
உலகளாவிய தன்மையை புரிந்துகொள்ள, கடவுள் வழங்கியுள்ள பூமியிலுள்ள வாழ்க்கையை அன்பானவருடன்
அனுபவிப்பதற்கும்.
Ø சில நோக்கங்களுக்காக முயற்சிகள் மற்றும் உழைப்புகள்
இருப்பினும் உலகில் உள்ள முரண்பாடுகளை உணர.
Ø அனுபவிப்பதை தாண்டி ஒன்றன்பின் ஒன்றாக எதிர்கொள்ள
இதயங்களையும் மனதையும் தயார் செய்ய.
Ø வெவ்வேறு சூழ்நிலைகளில் படைப்பாளரை நினைவில்
கொள்வதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள.
Ø திசையற்ற ஒன்றைத் தேடுவதற்கு வரம்புகள் இல்லை
என்பதையும், மனிதர்களின் உயர்ந்த கடமை கடவுளுக்கு பயப்படுவதும் அவருடைய கட்டளைகளைக்
கடைப்பிடிப்பதும் என்பதை புரிந்துகொள்ளவும். ஏனெனில் பூமியில் உள்ள மனித வாழ்க்கைக்கு
நீதி, மதிப்புகள் மற்றும் தரங்களை வழங்க எல்லாவற்றையும் கடவுள் நியாயம் தீர்ப்பதால்.
இலக்கிய தன்மைகள்:
இந்த புத்தகத்தில் அழகான கவிதை தொனியும்,
பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் கூடிய சில காரியங்களும் உள்ளன. மீண்டும் மீண்டும் சொல்லப்படும்
சொற்கள் (உதாரணமாக, அர்த்தமற்ற (மாயை)) மற்றும் முரண்பாடுகள் (உதாரணமாக, ஞானம் * முட்டாள்தனம்)
புத்தகத்திற்கு சுவையை சேர்க்கின்றன. மேலும், விஷயங்களை சமமாக ஒரே மாதிரி ஆசிரியர்
விவரிக்கவில்லை, அவரது எண்ணங்கள் அல்லது அவரைச் சுற்றியுள்ள மக்களின் அனுபவத்தை நினைவுபடுத்துகையில்
அவரது மனதில் தோன்றுவதை எழுதியுள்ளார், எனவே பெரும்பாலானவற்றில் கருப்பொருளின் சீரான
தன்மை இல்லை. கடவுள் இல்லாத மக்களின் உணர்ச்சிகள், புத்தி, முயற்சிகள் மற்றும் வாழ்க்கையின்
இன்பம் ஆகியவை புத்தகத்தின் உள்ளடக்கத்தின் படி காற்றைத் துரத்துவதற்கு ஒப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தனது எல்லா எண்ணங்களையும் மகிழ்விக்க சரியான வகையான சொற்களையும் கதைகளையும்
பயன்படுத்தியுள்ளார்.
கற்றல்:
Ø மனித ஞானம், செல்வம், உழைப்பு மற்றும் நிலைகள்
ஆகியவற்றின் வரம்புகளையும் அதை அடைவதற்கு நாம் முயலும் திசையில்லாத முயற்சிகளையும்
புரிந்து கொள்ள முடியும், ஏனென்றால் எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மறக்கப்படும்.
Ø மரணத்தின் உலகளாவிய தன்மை, இறையாண்மையுள்ள
கடவுளின் விவரிக்க முடியாத செயல்கள், மற்றும் அன்பான மக்களிடம் கடவுள் கொடுத்த எல்லா
நன்மைகளையும் நாம் உணர முடியும்.
Ø கடவுள் இல்லாதபோது எல்லாமே வீணாகிவிடும் என்பதால்
நாம் கடவுளுக்குப் பயந்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க முடியும், ஏனென்றால் மனிதனின்
முழு கடமையும் கடவுளின் நோக்கத்தின்படி வாழ்வது. ஒரு நிலையான மற்றும் நீதியான உலகத்திற்காக
கடவுள் எல்லாவற்றையும் நியாயத்தீர்ப்புக்கு கொண்டு வருவார் என்பதை நாம் அறிவோம்.
Comments
Post a Comment