புதியதும் நினைவிலிருப்பதும் எதுவும் இல்லை (பிரசங்கி 1: 9-11):

புதியதும் நினைவிலிருப்பதும் எதுவும் இல்லை (பிரசங்கி 1: 9-11):

கடவுள் மனிதனை தனது சொந்த சாயலில் படைத்ததால், கடவுளிடமிருந்து பெறப்பட்ட குணாதிசயங்களில் ஒன்றான அவரின் படைப்பாற்றல், மனிதனின் வரலாற்றில் அவர்கள் மாற்றத்திற்கு உள்ளாக அதிக வாய்ப்பளிக்கிறது. இதற்கு முன், ஆசிரியர் மீண்டும் மீண்டும் சில சுழற்சிகளை வெளிப்படுத்துகிறார், மேலும் மனிதன் ஒருபோதும் தனக்குத்தானே எதிலும் திருப்தி ஆகாததால் எல்லாவற்றையும் சோர்வாகக் கருதுகிறான். நடக்கும் விஷயங்களின் சுழற்சி பூமியில் இயற்கையாகவே நிகழ்வதால், சூரியனுக்குக் கீழே புதிதாக எதுவும் இல்லை என்று ஆசிரியர் கூறுகிறார். ஆசிரியரின் காலத்தில் என்ன நடந்ததோ அது அவரது வாழ்நாளுக்குப் பிறகு நடக்கும் என்று அவர் கூறுகிறார், அது முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று வெளிப்படுத்துகிறார். மேலும, அவர் காலக்கட்டத்தில் செய்யப்படும் அனைத்தும் அவருக்குப் பிறகும் செய்யப்படும் என்று ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். அவர் வெறுமனே தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு மனிரும் முன்பு யாரோ செய்ததைப் போல பல விஷயங்களில் தங்களைத் திருப்திப்படுத்த கடுமையாக பாடுபடுகிறார் என்ற ஆசிரியரின் ஆலோசனையை நாம் ஏற்க வேண்டும்.

வேறுவிதமாகக் யோசித்து, மாறிவரும் உலகத்தைப் உற்றுப்பார்த்தால், மனிதன் எதையாவது ஏற்கனவே இருந்த ஒன்றிலிருந்து உருவாக்கினான், அதே சமயம் கடவுளால் மட்டுமே எதையும் ஒன்றுமில்லாமல் உருவாக்க முடியும். உருவாக்கப்பட்ட அனைத்தும் இயற்கையில் ஏதோவொன்றோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும், அல்லது அது ஒரு மாயை அல்லது புனைகதையாக இருக்கும், அது ஒரு உண்மையாக இருக்காது. மீண்டும், ஆசிரியர் தான் சொல்ல விரும்புவதை வெறுமனே நியாயப்படுத்தவில்லை, ஆனால் தனது உலகத்தில் வாழ்வதன் அடிப்படையிலும் அனுபவங்களினாலும் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். ஒரு வித்தியாசமான கேள்வியின் மூலம் சூரியனுக்குக் கீழே புதிதாக எதுவும் இல்லை என்று அவர் கூறுகிறார், "இது புதியது என்று பாருங்கள்" என்று கூறப்படும் ஒரு விஷயம் இருக்கிறதா என்று கேட்கிறார். மக்கள் பல விஷயங்களை உருவாக்கியிருந்தாலும், அது தற்செயலானது இயற்கையில் ஏற்கனவே இருந்த காரியங்களோடு ஒப்பிடப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, புதியது என்று கூறப்பட்டவை முன்பே யுகங்களில் இருந்தன என்று ஆசிரியர் கூறுகிறார்.

சில விஷயங்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன, மறுபுறம் தொடர்ச்சியாக பூமியில் தலைமுறைகளின் மறைவு மற்றும் தோற்றம் நிகழ்கின்றன. முழு பூமியிலும் மனிதர்கள் மட்டுமே தங்கள் வாழ்வின் குறுகிய காலத்தில் பல கட்டமைப்புகள், தரநிலைகள் மற்றும் அமைப்புகளை உருவாக்கியவர்கள். ஒவ்வொரு மனிதனும் எதையாவது வெளிப்படுத்த விரும்புகிறான், மற்றவர்களிடையே தகுதியுள்ளவனாக கருதப்பட விரும்புகிறான். ஆனால் தொடக்கத்திலிருந்து விஷயங்களின் பதிவுகளை நாம் கவனமாக ஆராய்ந்தால், நடந்த எல்லா விஷயங்களும் நினைவில் இல்லை. ஒரு மனிதனை நாம் கருத்தில் கொண்டாலும், அந்த நபரின் கடந்தகால காரிங்களை நினைவுகூருவது மிகவும் குறுகியதாகும், அது பதிவு செய்யப்பட்டாலும் கூட, முழு வாழ்க்கையிலும் முன்னாள் விஷயங்களைப் பற்றி சுயத்தாலும் மற்றவர்களாலும் நினைவுகூரப்படுவது இல்லை. பெரும்பாலான நேரங்களில், மனிதர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி, முந்தைய விஷயங்களை நினைவில் கொள்ளாமல் முன்னேற விரும்புகிறார்கள். மேலும், எல்லா காரியங்களையும் எதிர்பார்ப்புகளையும் நினைவுகூருதல் இயலாதது, அவற்றில் சில மட்டுமே நினைவில் இருந்து பின்பற்றப்படும். அவை ஏதாகிலும் சிறப்பானதாக இருக்கலாம் அல்லது கடினமானதாக இருக்கலாம்.

சுய பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்:

1. ஏன் சூரியனுக்கு கீழே எதுவும் புதியதாக இல்லை?

2. ஆசிரியரின் பார்வைக்கு ஏற்ப சூரியனுக்கு கீழே புதியதாக எதுவும் இல்லை என்பது உண்மையா? நியாயப்படுத்துங்கள்?

3. செய்யப்பட்டுள்ளது இனியும் எப்படி செய்யப்படும்?

4. ஆசிரியர் எந்த கேள்வியைச் வழியுறுத்துகிறார்?

5. ஆசிரியரின் கூற்றுப்படி “இது புதியது என்று பாருங்கள்” என்று ஏன் சொல்ல முடியவில்லை?

6. புதியது என்று கூறப்படும் அனைத்தும் எப்படி முன்பே யுகங்களில் இருந்தன?

7. முந்தைய விஷயங்கள் மற்றும் பிற்கால விஷயங்களைப் பற்றி ஆசிரியர் என்ன கூறுகிறார்?

8. முந்தைய அல்லது பிற்கால விஷயங்கள் நினைவில் இல்லாதது ஏன்?

9. மனிதனின் முயற்சிகள் எவ்வாறு தொடர்ந்து மாறுகிறது, எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும்?

10. திருப்தியடையாத மனிதனின் வாழ்க்கை எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Comments

Popular posts from this blog

கட்டுப்படுத்தப்படாத விருப்பங்களின் வெறுமை (பிரசங்கி 2: 9-11)