செல்வங்கள் மற்றும் உடைமைகளின் வெறுமை (பிரசங்கி 2: 4-8)

 செல்வங்கள் மற்றும் உடைமைகளின் வெறுமை (பிரசங்கி 2: 4-8)

பிரசங்கி புத்தகத்தின் ஆசிரியர் தனக்குத் தானே செய்துக்கொண்டதை பிரதிபலிக்கிறார், பின்னர் அவர் செய்ததை பட்டியலிடுகிறார், அவை மகிழ்ச்சியை நோக்கிய பொதுவான மனித நோக்கங்களாக இருந்தன. ஆசிரியர் தனது ஞானத்தினாலும் அறிவினாலும் சிறந்த வேலைப்பாடுகளைச் செய்ததாகக் கூறி பட்டியலைத் தொடங்குகிறார். அவர் தன்னை ராஜா என்று குறிப்பிடுவதால் அரண்மனைகளாக இருக்கக்கூடிய வீடுகளை அவர் கட்டியிருந்திருப்பார். சாலமோன் ஒரு முறைமையின் மூலம் கடவுளை வணங்குவதற்காக முதல் ஜெப ஆலயத்தைக் கட்டியதையும், அதன் மகத்துவத்தையும் மகிமையையும் கொண்ட நகரங்களைக் கட்டியதையும் வரலாற்றில் காண முடியும். முந்தைய வசனங்களில் அவர் குறிப்பிடுவதைப் போல அவரை மதுவால் மகிழ்விக்க திராட்சைத் தோட்டங்களை நட்டுள்ளார். இயற்கையின் அழகில் மகிழ்ச்சி அடைவதற்கும், அதன் சாரத்தை உணவாகவும், பல பயன்பாடுகளுடன் இனிமையான பொருட்களாகவும் அனுபவிப்பதற்காக அனைத்து வகையான பழ மரங்களுடன் தோட்டங்களையும் பூங்காக்களையும் தனக்காக உருவாக்கியதாக மீண்டும் ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் அழகிய தோட்டங்களையும், காடுகளின் மரங்களையும் தொடர்ந்து வளமாக வைத்துக் கொள்வதற்காக நீர்நிலைகள் போன்ற குளங்களை உருவாக்கியதாக அவர் கூறுகிறார், இது அவரை இன்பமடைய செய்தது, மேலும் அவரது ராஜ்யத்தின் சுற்றுச்சூழல் சமநிலையுடனும், செல்வமுடனும் ஆரோக்கியமுடனும் இருக்கச் செய்தது.

தனது வீட்டில் ஏற்கனவே பல வேலையாட்கள் இருந்தபோதிலும், இன்னும் பல ஆண் மற்றும் பெண் வேலையாட்களைப் பெற்றதாக ஆசிரியர் கூறுகிறார். மீண்டும் அவரது வீட்டில் வேலையாட்கள் பிறந்தார்கள், அது அவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. ஆதிக்கத்திலும் மனித வளங்களைப் சிறந்த முறையில் பயன்படுத்துவதிலும் ஆசிரியர் சிறந்தவரும் புத்திசாலியுமானவர். மனிதர்கள் மட்டுமல்ல, வீட்டு விலங்குகளின் மந்தைகளும் கூட்டங்களும் அவருக்கும் அவர் மக்களுக்கும் பல நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. எருசலேமில் இருந்த அனைவரையும் விட எல்லாவற்றையும் அவர் வரம்பு இல்லாமல் பெற்றிருந்தார். பெரிய சிறப்பும், கம்பீரமும், புத்திசாலித்தனமான ஊழியர்களின் பயன்பாடும், பொருட்களின் கவர்ச்சியான வேலைப்பாடுகளும், அசாதாரணமான ஒழுங்கமைப்யும் சாலமோனின் மாகாணத்தில் இருந்தன, அதனால் ஷேபாவின் ராணி மற்றும் சாலமோனின் காலத்தில் வாழ்ந்த பலரால் அவர் போற்றப்பட்டார்.

வெள்ளி, தங்கம் ஆகியவற்றையும் மன்னர்கள் மற்றும் மாகாணங்களின் புதையல்களையும் சேகரித்ததாக ஆசிரியர் கூறுகிறார். எருசலேமின் ராஜாவாக இருந்ததால், அவருடைய மகத்துவத்தினாலும் ஆதிக்கத்தினாலும், தன்னைச் சுற்றியுள்ள ராஜாக்களின் எல்லா தயவையும் அவர் அனுபவித்திருப்பார். மேலும், ஆசிரியர் தன்னை ஒரு சிறந்த வெற்றியாளரான தாவீதின் மகன் என்று குறிப்பிடுகிறார். அருகில் உள்ள மாகாணங்களின் ராஜாக்கள் அவரைக் கவுரவித்திருப்பார்கள் அல்லது அவருடைய ஞானத்திற்கும் ஆற்றலுக்கும் தங்களை உட்படுத்தியிருப்பார்கள், அதனால்தான் அவர்கள் அவருக்கு வெள்ளியையும் தங்கத்தையும் செல்வங்களையும் வழங்கியிருப்பார்கள். அவரை மகிழ்விப்பதில் பொழுதுப்போக்கிற்கு அவருக்குக் குறைபாடு இல்லை. இனிமையான குரல்களால் காதுகளை மகிழ்விக்க கூடிய ஆண் மற்றும் பெண் பாடகர்களைக் கொண்டிருந்ததாக ஆசிரியர் கூறுகிறார். மேலும், உடல் ரீதியாக மகிழ்விக்க கூடிய நிறைய மறுமனையாட்டிகள் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். பூமியில் பெரும்பாலான மக்கள் அடைய பிரயாசப்படுவதான காரியங்களாய் எழுத்தாளர் ஏராளமாகக் கொண்டிருந்தார, எனினும் கடவுளும் சரியான திசையும் முதன்மையாக இல்லாததால், அது அனைத்தும் அர்த்தம் இல்லாததாக உணர்கிறார்.

சுய பிரதிபலிப்புக்கான தூண்டுதல்கள்:

1. ஆசிரியர் தனக்காக எவற்றைக் கட்டியெழுப்பினார்? ஏன்?

2. ஆசிரியர் எதனை உருவாக்கி நடவு செய்தார்? ஏன்?

3. ஆசிரியர் ஏன் குளங்களை உருவாக்கினார்?

4. ஆசிரியர் தனக்காக என்ன வாங்கினார்? அவற்றைப் பற்றி அவர் மேலும் என்ன கூறுகிறார்?

5. எழுத்தாளரிடம் என்னென்ன உடைமைகள் இருந்தன? அது எவ்வளவு?

6. ஆசிரியர் தனக்காக என்ன சேகரித்தார்? எங்கிருந்து?

7. ராஜாக்களும் மாகாணங்களும் ஏன் ஆசிரியருக்குச் செல்வங்களை வழங்கினர்?

8. எழுத்தாளர் பாடகர்கள் மற்றும் மறுமனையாட்டிகளை ஏன் பெற்றிருந்தார்?

9. ‘மனுஷருடைய குமாரர்களின் மகிழ்ச்சி’ என்று ஆசிரியர் எதைக் குறிப்பிடுகிறார்?

10. பூமியில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக உண்மையிலேயே பாடுபடும் அந்தச் செழிப்பு மற்றும் உடைமை அனைத்தையும் வைத்திருப்பதைக் குறித்து ஆசிரியர் எப்படி உணர்ந்தார்?

Comments

Popular posts from this blog

கட்டுப்படுத்தப்படாத விருப்பங்களின் வெறுமை (பிரசங்கி 2: 9-11)

உழைப்பில் வெறுமை(பிரசங்கி 1: 1-3)

மகிழ்ச்சியற்ற செயல்பாடுகளும் காற்றை பின் தொடர முயற்சித்தலும் (பிரசங்கி 1: 12-15)